![]() |
| "இதயம் " பேசும் |
கல்லூரி செல்வதென்றால் கனிவான
நிகழ்சி தான் குமரனுக்கு!. சுயநிதி கல்லூரிகள் சுயம்புகளாக, முளைக்கத்தொடங்கிய
தொன்னூருகளின் துவக்க காலம் அது!
இறைவன் ‘நெல்லுக்கு
வேலி’ அமைத்த தென்கோடி திருநெல்வேலியில் இருந்து, ஒரு மணி நேர பயணத்தில், தச்சநல்லூர்,
கயத்தாறு வழியாக, உமையவள் குடியிருக்கும் கோவில்பட்டியை அடைவதுதான் அவன் நித்த
பயணபாதை.
‘நேசமணி மின்மினி
பேருந்து...’ ஆகா! என்ன ஒரு பெயர் பொருத்தம்?
பெயருக்கு ஏற்றார்போல்,
இளவண்டுகள் மற்றும் மின்மினி பூச்சிகளின் “ரீங்காரம்...”, கல்லுரி வாசல் வரும்வரை ஒலித்து
கொண்டே இருக்கும்...
யார்! இவ்வழி நெடுக
தைத்து வைத்தார்கள் இந்த... நெல்மணிகளை? அப்பப்பா!! என்ன பசுமை? என்ன வாசம்? ஓ!.. இதனால்தான் இவ்வூர்க்கு, ‘தச்சநெ(ந)ல்லூர்’ என்று பேர் வந்ததோ?
என்று அவனுள் நினைத்து கொண்டான்.
“பச்சைநெல்லிலையில் படுத்துறங்கும்
பனியை, இச்சையுடன் எடுத்துசெல்ல” கதிரோன் வரும், அந்நேர பேருந்துப்பயணம், அவனுக்கு
அவ்வளவு இனிமையான, புதிய புதிய உணர்களை தந்தது நித்தமும்...
சைவம் தழைத்திருந்த முன்னொருகாலத்தில்,
‘உமையொருபாகன்’ தன் தலைவி செண்பகவல்லியை காண, இவ்வழியில் தான் நித்தம் பயணம்
செய்திருப்பானோ?. துளசிமாலை அணிந்தவன், அந்த ஆற்றில் தினமும் பயணப்பட்டதால்,
இன்றும் கசந்து இருக்கும் ‘கச(ய)த்தாறு’ வரலாற்று எச்சமாக...
அன்றேனோ! கூட்டம்
குறைவாகவே இருந்தது வண்டியில். பொறியியல் கல்லூரி வாயில் நுழைந்து, மூன்று வருடம்
கரைபுரண்டு ஓடிவிட்டது. காலத்தின் இவ்வேகத்தை, அவனால் உண்மையில் நம்பவே முடியவே
இல்லை. அவன் எண்ண அலைகள் சற்று பின்னோக்கி ஓடியது...
தாய்மொழியில் நன்றாக
புரிந்து படித்து, நல்ல மதிப்பெண் வாங்கியும், மருத்துவ படிப்பு கனவு, ‘பொடிப்பொடியான’ நாள்!.
ஆம்!. கல்வி “வியாபாரம்”
ஆகி வெகு காலம் ஆனதை, அறிந்து தான் இருக்க வில்லை இந்த கிராமப்புற மாணவர்கள். கணித
சூத்திரம் மட்டுமே கசடற கற்றவர்க்களுக்கு, மற்ற மந்திரமும் & சூத்திரமும், தெரிந்தருக்க நியாயம்
இல்லை தான்!.
“பட்டகாலில் தானே படும்!..”
.இது வரை சிறப்பாக சறுக்காமல் விளையாடிய களமும், முற்றிலும் மாறி இருந்தது கல்லூரி
முதல்நாளில்!
அடிப்படை ஆங்கில அறிவு
இருந்தும், மாற்றத்தை மனம் ஏற்க முற்றிலும் மறுத்தது.
அது ஏனோ தெரியவில்லை? மனித குலம் மட்டும், மாற்றத்தை எப்பொதும் ஏற்ப்பது இல்லை! குமரன் மட்டும்
என்ன விதி விலக்கா?
தீந்தமிழ் வாக்கிய வார்த்தைகள், எப்படி
மாற்றி சொன்னாலும் ‘அதே பொருள்’ தர!, ஆங்கில மொழி வார்த்தைகள்
மட்டும் ‘தகராறு’ தான் தந்தது அவனுக்கு எபோதும்.
கல்லுரி சென்ற
சிலநாள்களில், மொழிகளில் பிழை இல்லை என்பதை உணர்ந்தான்.!
“நாம் எதுவாக
வேண்டுமோ!,’அதுவாகவே மாறவேண்டும்!”. அவனும் மாறினான்’. எம்மொழியும் வசப்பட்டது, அவனுக்கு இப்போது...
‘கசந்து இனிக்கும்
காட்டு நெல்லியாக!!’ இப்போது அவனுக்கு, இந்த மூன்று வருட படிப்பு கசப்பாகவே... இல்லை.
கல்லூரி வாயில் வந்தது கூட தெரியாமல், மூன்றுவருட பழைய
நினைவலையில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தவனை, நிகழ்காலத்துக்கு கொண்டுவந்தது
நடத்துனரின் விசில் ஒலி ஓசை.
கல்(ள்)லூரித் தேவதைகளுடன் சேர்ந்து, அவனும் ‘செக்க செவேல்’
என்று இருந்த செம்மண்ணில் நடக்க(மிதக்க) ஆரம்பித்தான். ஆம்! அவனுக்கு தெரியாது
அப்போது , இந்த சிறு சிறு தூறல் விழுந்த, செம்மண் வாசத்தை சுவாசிக்கும் கடைசி விவசாய
தலைமுறை இவன்தான் என்று!!
என்றும் நடந்து செல்லும் அந்த ஓற்றடி பாதையில் நடந்து சென்ற
தேவதைகளுக்குள் சிறுகுழப்பம்! ஆம்! மானாவரி பயிர் விளைக்க, நம் விவசாய தோழன்
உழுததால் சதுர(SQUARE) நிலத்து,
ஓற்றடிப்பாதை(ROUTE) காணமல் போய் இருந்தது.
அக்கூட்டத்து தலைவி திகைத்த படியே!, தன் சகதோழியை பார்த்து
கலக்கத்துடன் கேட்டால்!, என்னடி? ரூட்டையே (ROUTE) காணும்
?
குமரன் சிறிதும் தாமதிக்காமல் , “ரூட்டை” இப்பத்தான் தான் “SQUARE” பண்ணிருக்காங்க (Sqrt=Square Root=
) அதான் “ரூட்” காணாம போயிருச்சி என்றான் “சிலேடையாக”.
இத கல்லூரி
வர்ரதுக்கு முன்னாடியே, பள்ளிக்கூடத்தில் சொல்லி கொடுத்திருபார்களே?? என்று குமரன்
கூறியபோது கூட்டமே கொள்லென்று சிரித்தது!!!
கணித
மேதை ‘ராமானுசத்தாலும்’, சிலேடை கவி அரசன் ‘காளமேகம்’ கொண்டும்,அவள் அகந்தையை அறிவால் அடைகியதாக,
செருக்குடன் அவன் வகுப்புக்குள் நுழைந்தான். மூன்று வருட படிப்பு இவ்வாறு
முடிவுக்கு வந்தது.
அன்றையதினம் அவனுக்கு நன்றான நாளாக தெரியவில்லை. அது “நான்காம்
ஆண்டு தொடக்கம்!” என்பதால், ‘ஆய்வு திட்டம்’ பற்றியும், ‘ஆய்வு களம்’ குறித்தும், ஆறுமாத திட்ட அறிக்கை சமர்பிக்க
வேண்டும். குமரனுக்கு, பதற்றம் மெல்ல மெல்ல தொற்றி கொன்ட(ற)து!
மூன்று ஆண்டு “மின்னியல் பாடம்” படித்து, மதிப்பெண் மட்டும்
எடுக்க தெரிந்த அவனுக்கு, ஆய்வு செய்தலும், புதியதை கண்டுபிடிதல், “புதிதாகவும்
& புதிராகவும்” இருந்தது. தனக்கு இது ‘கற்று தரப்படவே இல்லை’ என்று, உள்ளுக்குள்
குமுறிகொண்டான்.
அவன் சகமாணவர்களை கலந்தோசித்து, முடிவு எடுப்பது, என்று
தன்னை தானே தேற்றிகொண்டான்.
சகநண்பன் சந்திரன், கவலை இல்லாமல். மச்சி! ‘என் அண்ணன், அவன்
கல்லூரியில் சமர்ப்பித்த, ‘அதே’ ப்ராஜெக்டை அப்படியே காப்பி பண்ணி சமர்ப்பித்து,
ஆறுமாசம் ஆனந்தமாக இருக்கபோறேன்டா! என்று
எளியதாக சொன்னான்.
செல்வனோ, டேய் மச்சி ! ‘காசு குடுத்தா போதும்,
ப்ராஜெக்ட்,கிட்,எல்லாம் அய்யா கையிலே…’. “காசு எல்லாம் செய்யும்” என்ற
கொள்கைப்படிப்பு மட்டும் கற்ற இன்னொரு நண்பன்.
மற்ற நண்பர்களோ கோரஸ்சாக “இருக்கவே இருக்கு நிறைய கல்லுரி
ப்ராஜெக்ட்’ அத காப்பி பண்ணி , திரும்ப அப்படியே பதிவு செய்வோம் என்றார்கள்.
துறை முதல்வர் அன்புடனும்,கண்டிப்புடன் சொன்ன வார்த்தைகள்,
யார் செவிகளுக்குள்ளும் சென்றதாக தெரியவில்லை
முதல்வர் சொல்வார் ‘புதிதாக செய்ய’, ‘புதிதாக கண்டுபிடிக்க’,
எப்படி செய்யமுடியும்? அதுவும் இந்த ஆறே மாதத்தில்? ஒரு நல்ல ‘ஆய்வு களம்’
இருக்கா? நல்ல ஆலோசனை உண்டா? நல்ல கணினி உண்டா? நல்ல நூலகம் இருக்கா?
எல்லோரும் புதிதாய் கண்டுபுடித்து இருந்தால், இப்போ
இந்தியாதான் கண்டுபிடிப்பில் முதல் இடத்தில இருக்கும். சீனா காரனும், தைவான்
காரனும் தான் கண்டுபிடிக்கிறான். அவங்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்குது. நமக்கு
அப்படியா.. மெஸ்ல சாப்பாடே.. கேட்டமாதிரி கிடைக்கல. மாதத்தில் ரெண்டுநாள் போட்ட
கவிச்சைய, இப்பபோ ஒண்ணா குறைச்சிட்டாங்க!.
இதுல நம்ம வேற, கண்ணு முழிச்சி.. புதுசா கண்டுபிடிச்சி..
அது சரியாய் வேலை செஞ்சுட்டாலும்....என்று பெருமூச்சுடன் சொல்லி ,பேச்சை
தொடர்ந்தான் ‘தோசை’கோபால்
‘முட்டை போடுகிற கோழிக்கு தான் பிட்டிவழி தெரியும்’ டா
மாப்பிளே!
இன்னைக்கு..., அவர் சுள்ளுன்னு உறைக்கிற மாதிரி சொன்னதால், இப்படித்தான்
கோவமா இருக்கும்.
போடா! மாப்ளே! போய் போர்வைய, நல்லா போர்த்தி தூங்கு. காலையில்
எல்லாம் மறந்துடும்!!
நண்பன் சத்யா,மணி கூட சேர்ந்து ,சிவகாசி,நாகர்கோவில்,நெல்லை
ஆகிய கல்லூரி நூலகங்கள் சென்று, ‘ரெபர்ரன்ஸ்’ எடுத்து, புது ‘ப்ராஜெக்ட்’ எப்படியாவது
பண்ணிவிட வேண்டும் என்று மனதில் உறுதிமொழி எடுதவனாகவும், இதெல்லாம் முதள்லிலே
இருந்து, ஏன் பள்ளியில் ஆரம்பிக்க மாட்டேன்ங்கிறாங்க என்று அவனுக்குள் அழுது
புலம்பி வீடு நோக்கி பயணித்தான்.
நல்லாபடிச்சா நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம்
கிடைக்கும் என்கிறார்கள்! நிறையபேர் நல்லா மதிப்பெண் வாங்கியும், வேலை கிடைக்காமல்
இருக்கிறாங்க!. நிதி நிர்வாகம்,பணம் மிக முக்கியம்னு சொல்லுறாங்க, ஆனா அத எங்கையாவது
பாடமாக பள்ளிகளில் வைக்கலாம்? இந்த பாடக்கல்வியையும்!, வாழ்க்கை கல்வியையும்!,
எபோதுதான் முழுமையாக கற்பேனோ? என்று தனக்குள் புலம்பியவனாக மாலை வேலை வீடு வந்து
சேர்த்தான்!.
அப்படியே பத்தமடை பாயை விரித்து , தன் அன்னையின் சீலைகளை சேர்த்து
தலையணையாக்கி சாய்ந்து ,சின்ன மரக்காயில் வறுத்த நிலக்கடலை நிரப்பி,ஓவ்வொன்றாக
உடைத்து மென்று தின்றபடியே, தொலைகாட்சியில் நிகழ்ச்சியை ரசிக்க தொடங்கி விட்டான்
குமரன்.
நாள்கள் மாறினாலும்!, ‘இன்றைய செய்திகள்’ மட்டும் மாறவே
இல்லை!!. கெளரவக்கொலை, கொள்ளை, மனித உடல் உறுப்பு திருட்டு!.... அன்றும்.
என்றும்போல், “கல் நெஞ்சக்காரர்கள்”!,”இதயம் இல்லாதவர்கள்!” என்று இதயத்தை திட்ட ஆரம்பித்து,
அப்படியே களைப்பில் கண்ணுறங்க ஆரம்பித்தான்...
“திடிரென்று!!!” இதயம் அவனிடம் மெதுவாக
பேசத்தொடங்கியது...
எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லிச்சொல்லி, திட்டுவதையே
வழக்கமாக வைத்துள்ளாயே குமாரா? என்று பொறுத்து... பொறுத்து.., இன்று, பொறுக்க முடியாமல்
கேட்டே விட்டது, இதயம் அவனிடம்!.
ஒரு சின்ன ‘ப்ராஜெக்ட்’ கூட சுயமாக செய்யத்தெரியாத உன்னை
விட, நான் எவ்விதத்தில் குறைந்து போய்விட்டேன் என்று!. ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது’ மீண்டும்...
‘சுருக்கென்று கோபம் அவன் தலைக்கு ஏறியது’!. ‘நான்’ கல்லூரி
முடித்து, நல்ல வேலைக்கு போக உள்ளேன்.. நீ! என்னடான்னா ‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு
உதவாது’ என்கிறார் வியக்கானமாய், என்றான் முகம்சிவக்க..
நீ! மேதாவின்னா, ‘நான் கேட்கும் சின்ன சின்ன கேள்விகளுக்கு
பதில் சொல் பார்கலாம்’ என்றது இதயம் நக்கலாக..
ஆத்திரத்தின் உச்சியில் இருந்தாலும் குமரன் விவேகமாக,
தெரிந்த சப்ஜெச்டில் மட்டும் தான் கேள்வி கேட்க வேண்டும் .. ‘நோ அவுட் ஆப் செலபஸ்’ என்றான்.
இதயத்தின் முதல் கேள்வி அம்பு à போல் வந்தது...
முதல் ‘எலெக்ட்ரிக்கல் சிக்னல்’ உருவாக்கியது யார்?
ஆகா!! தெரிந்த செலபஸ் கேள்வி
தான்.. ஆனா... பதில்?? ம்.. ம்.. நான்கு வருடம் புத்தகத்தில் படித்த மொத்த பெயர்களும்
வந்து குழப்பியது குமரனை...
‘கில்பர்ட்’, ம்... இல்ல!.. ‘பிராங்க்ளினா?’ ,’வோல்டா?’, இல்ல.. இல்லை... இப்ப நினைவுக்கு
வந்திருச்சி என்ற குதிதவனாய் . முடிவாக ‘எடிசன்....’ கரெக்டா? என்றான் குமரன்
ஆர்வமாக..
நீ.., என் கேள்வியை, சரியாய்
கவனிக்க வில்லை என்று நினைக்கிறேன். நான் ‘‘எலெக்ட்ரிசிட்டி’ கணடுபிடிதவர்கள்
பெயர்களை கேட்க்கவில்லை.. ‘எலெக்ட்ரிக்கல் சிக்னல்’ உருவாக்கியது யார்? என்று மட்டும்தான் கேட்டேன், என்றது இதயம்
எகத்தாளதுடன்!!!.
சரி
பிழைத்துப்போ ! இரண்டாவது எளிமையான கேள்வி கேட்கிறேன்.
முதல் ரிதமிக் ஓசையை உருவாக்கியும், அதை கேட்டு ரசித்ததும்
யார் ?
நோ! நோ!! நோ வே! இது அவுட் ஆப் செலபஸ்
என்றான் அப்பாவி குமரன்.
சரி வேண்டாம் விட்டுவிடு! முடிச்சி அவிழ்கும் மூன்றாம் கேள்வி கேட்கிறேன்
முதல் ‘மூடிய சுற்று ஊர்தி பாதையை அமைத்தது யார்?
இப்போது குமரன் கண்கள் இருள ஆரம்பித்து, தலை சுற்ற ஆரம்பித்தது!
இப்போது சாந்தமான இதயம் அவனை மேலும் கலங்க விடாமல் ..
புன்னகையுடன்..
நான் கேட்ட,கேட்க போகும்... அனைத்து கேள்விக்களுக்கும்... ‘விடை
ஒன்றே ஒன்று தான்!’ என்று மீண்டும் புதிர் போட்டது இதயம்..
இதை கேட்ட குமரன்,சுக்கு சுக்காக நொருங்கி போனான்.தலை சுற்றிதான்
போனது அவனுக்கு!
என்னை ஏன் இப்படி குழப்புகிறாய்? நான் என் தோல்வியை
ஒத்துகொள்கிறேன்,என்றான் மிகப்பணிவாக...
அது... அது..
நீ... நீயேதான் என்றது இதயம்...
அவனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவே இல்லை... வாய் விட்டு
சிரித்தே விட்டான் சத்தமாக...
பதினாறு வருடம் படித்து...,பட்டம் வாங்கும் நாள்
நெருங்கியும், ஒரு சின்ன புதிய பொருளை கண்டுபிடிக்கவே ‘இப்பவே கண்ண கட்டுதே..”
என்றுசொல்லும் நான்..., நீ! சொன்ன இந்த மூன்று பொருளை உருவாக்கினேனா??? நோ சான்ஸ்!
ஆம்! சத்தியமாக, அது நீயேதான்!! என்றது ஆணித்தரமாக
மற்றொறுமுறை...
குமாரா!! சற்று காலச்சக்கரத்தை பினோக்கி சென்றுபார் ..ஏழு
வருடத்துக்கு முன்னால்.,உன் ‘பத்தாம் வகுப்பு’ படிக்கும் போது, “மதிபெண்களுக்காக மட்டுமே”, என்னை நீ மிகவும்
தத்துருவமாகவும், அழகாகவும் படம் வரைந்து, பாகங்கள் குறித்தாய்.ஆனால்!! அப்போது...
நீ என்னை சற்று உள் நோக்க தவறிவிட்டாய்.
உன் இதயத்தை ரசித்து.. பார்த்து பார்த்து ,வரைந்த நீ.. ஏன்?
உன் இதய ஓசை லப்-டப் என்று ரிதமிக் ஓசையில் ஒரே மாதிரி துடிக்கிறது என்று
கேட்கவில்லை?
நான் எலும்பில்லாத வலுவான தசைகளால் ஆன நான்கு சுவர் அறை
கொண்ட ,குருதியை ஒரே திசையில் செலுத்தும் பம்பிங் சிஸ்டம் அமைப்பு கொண்டவன்.
உன்னுள் அமைந்த, அந்த நான்கு ஒரு வழி பாதை வால்வு(கதவு-one
way trap) மூடும் போது தான் லப்-டப் ஓசை கேட்கிறது.
குருதி ஒரு அறையில் இருந்தது மறு அறைக்கு செல்லும் போதும்(லப்
ஓசை) ,மறு அறையில் இருந்து நுரையீரல் , உடலுக்கு செல்லும் போதும் (டப்
ஓசை). எழுகிறது.
உடல் மற்றும் நுரையீரல் குருதி , இதய மேல் வலது, மேல் இடது
அறைகளில் வந்தடையும் போது, ஆட்டோஎலெக்ட்ரிக் சிக்னால் அழுத்துப்பட்டு ,கீழ் வலது, கீழ் இடது அறை இதயதுக்கு பாய்ந்து,
இதய கீழ் வலது, கீழ் இடது அறையிகளில் இருந்தது மறுபடியும் நுரையீரல் மற்றும் உடலுக்கு திரும்ப அனுப்பப்படுகிறது.
இன்னும் என்னை நீ , சற்று உற்று கேட்டால்.. என் மூன்றாம்
ஓசையை கூட கேட்பாய் என்று அடுத்த ஐயத்தையும் அவனுள் விதைத்தது!
இந்த இதய அறைகளின் வழியாக குருதியை சீரான வேகத்தில் செல்ல
அழுத்தும் விசை வேண்டும் அல்லவா?
நீ வெஸ்டன் ஸ்டைல் டாய்லெட்டில் பார்க்கும் பம்பிங் சிஸ்டம்,
என்னை பார்த்து காப்பி அடித்து பண்ணியது தான். அதில் நீர் வெளியேற கைவிசை தேவை.
இங்கு உன் ‘உயிர் குருதி’ பம்பிங் செய்ய, நீயே உருவாக்கி கொண்ட ‘ஆடோமாடிக்’ அமைப்பு
தான் ‘எலெக்ட்ரிக்கல் சிக்னல்’ சிஸ்டம்(“இயற்கை பேஸ்
மேக்கர்)”
மனித கண்டுபிடுப்பான “செயற்கை டிஜிட்டல் பேஸ் மேக்கர்”
கருவியானது, இதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும் கட்டுப்படுத்தி சமச்சீராக்குகிறது.
“இதயமே இல்லாத மனிதர்கள் இவர்கள்” என்று
திட்டுகிறாய். உண்மையிலே இதயமே இல்லாத மனிதர்களை’ நீ காணும் காலம் வெகு தூரத்தில்
இல்லை! .
உன் “உயிர் மூச்சு காற்றை” நுரையீரல் வழியாக உள்வாங்கி, “குருதி
ஊர்தி” வழி, பயணம் செய்து திசுக்களுக்கு உணவளித்து. “உயிர் இல்லா மூச்சு காற்றை”
வெளிஅனுப்பி சுழற்சி முறையில் செயல்படும் இயற்கை எந்திரம் நான்!.
இப்போது சொல்.. என்னை உருவாக்கியது யார் ? என்று நெடுநாள் பாரத்தை இறக்கிவைத்த நிம்மத்தியில்,இதமான
இதழில் புன்னகையுடன் கேட்டது இதயம் குமரனிடம்...
தயங்கியவாறே... குமரன் இதயத்திடம் கேட்டான்.
இதெல்லாம் அந்த “கடவுள்” தானே
படைத்தான் ?
இதய குருதி திரும்பவும் கொதித்தது !! அடக் கடவுளே!. விடிய
விடிய ராமாயணம் சொன்னோமடா இவனுக்கு!
மறுபடியும் முதல்ல இருந்தா! என்று இதயம் பயந்தே தான் போனது.
குமாரா ! நீ தான் என்னை உருவாகினாய்.
என்னை மட்டும் அல்ல,உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும், மனிதனாகிய நீங்கயே உருவாக்கி
கொண்டீர்கள்.
என்ன..., உன் தேவைக்கு ஏற்ப என்னை முழுவதுமாக
மாற்ற, சில யுகங்கள் எடுத்துகொண்டது மனித இனம். அவ்வளுவுதான்.
”உனக்கு எது தேவையோ, அதுவாகவே
நான் மாறிப்போனேன்”. முதலில் இருந்து “நான்
உன்னுள் தான் இருக்கிறேன்” என்றது இறுதியாக.
இதுவரை உன்னிடம் பேசியது, “நான்” இல்லை என்பதையும்
நீ அறிவாய்!!! என்ற நிம்மதியுடன் செல்கிறேன் என்றது.
குமாரா.. டேய் குமாரா..
வேறு உலகில் சஞ்சரித்து கொண்டிருதவனை, அம்மா! பயந்து “உலுப்பு உலுப்பி”
எழுப்பினால்.. இன்னும் சிறிது விநாடிகளின், அவன் கண் விழித்து பார்கவில்லை
என்றால், இவள் இதயம் நின்றே தான் போய் இருக்கும்...!
என்னடா முரடா? இப்படி பயமுறுத்திட்டேடு!! அம்மா பயந்தே
போயிட்டேன்டா!!. என்று செல்லமாக கோபித்து கொண்டால்.
ஏன்!, உன் முகம் இப்படி செவந்து கிடக்குது...? வேர்வை
இப்படி ஊத்துது...?. உடம்பு தீயா கொதிக்குது? உடம்பு கிடம்பு சரியில்லையா...?
ஏதாவது கெட்ட ‘கெனா’,சொப்பனம் கண்டயால..?
இல்லம்மா.. உடம்புக்கு ஒண்ணும் இல்லை... நல்ல ‘கனவு’...
இல்ல, நல்ல ‘நினைவு’ தான் கண்டேன்!! என்றான் தெழிந்த நீரோடையாக!!!
‘சிவ ராத்திரியும்’ அதுவுமா! இப்படி தூங்ற? உன் சேக்காளிங்க, அப்பேவே உன்னை
தேடி வந்தங்கா..
ஏதோ ப்ராஜெக்ட் எடுக்குறதுக்கோ! பிச்சை எடுக்குறதுக்கோ , நாளைக்கு
ரெண்டு,மூணு ஊர் போகனுமாமே! என்று அவனை நக்கலாக எழுப்பி பாயை சுருட்டி கொண்டே...
குமாரா!! டிவில கணேசன் நடிச்ச நல்ல படம் போடுவாங்கடா!!
இப்போ!!! என்று அம்மா தொலைகாட்சியில் முன் அமர்ந்தால்.
அம்மா !! நான்
நாளைக்கு எங்கும் ப்ரோஜெக்ட்டோ , பிச்சையோ எடுக்க போகலம்மா!!! என்று
சொல்லிய படி, அவன் வீட்டு பரண் நோக்கி, மான் போல் துள்ளி! குதித்து ஓடினான்!
கடந்த மூன்று வருடங்கள்... “மதிப்பெண் எடுக்க மட்டுமே” புரட்டிய புத்தகத்தை , இப்போது !!
தன் “மதிப்பை கூட்டும்” ஆயுதமாக முதல் பக்கத்தில் இருந்து,
‘கசடற’ கற்க ஆரம்பித்தான்.. ’படைப்பவன்’ எழுத்துருவில் இருபதை கண்டான் இப்போது! குமரன்
பார்வை மட்டும் அல்ல, வாசகர்கள் ஆகிய நம் பார்வையும் மாறி விட்டதை கண்டு
இன்புறுகிறேன் இப்போது!!
தன் அறையில் தனிமையில் ,அகர வரிசையில் பாடபுத்தகத்தை
சுவாசிக்க ஆரம்பித்தவனுக்கு , ‘எல்லாம் ப்ராஜெக்ட்’ ஆக தெரிந்தது.
வெற்றிகளிப்பில் மிதந்து கொண்டிருந்த குமரனை, அம்மா ஆவலுடன்
அழைத்தவாறே வந்தால்,குமரன் படிப்பது கண்டு மிக ஆச்சிரியமாக,பரிச்சைக்கு கூட, கடைசி
நேரத்தில் தான் படிப்பிங்க துரை? அப்பெல்லாம் வீடே அல்லோலப்படும். நாங்க
மூச்சிவிடவே பயப்படுவோம், எங்க உன் படிப்பு கெட்டுமோனு? இன்னும் ஆறு மாசத்துக்கு புஸ்தகத்தை தூக்க
மாட்டேன்னு நினச்சேன்.. நீ என்னடானா , பரணிலிருந்து பழைய புக்கெல்லாம் எடுத்து
படிக்கிற??
குமரன் இதழில் மெல்லிய புன்னைகயுடன், அம்மா! நீங்க போய்
உங்களுக்கு பிடிச்ச சாமி படத்தை போய் பாருங்க, சிவராத்திக்கு உங்களுக்கு புடிச்ச
நடிகர் சிவாஜி,ஜெமினி படம் “திருவருட்செல்வன்” அப்பவே போட்டுடாங்க. உங்களுக்கு
புடிச்சமாதிரி நல்ல சவுண்ட் வச்சுக்கோங்க என்றான் ‘புத்தனாக’!!!
அம்மாவுக்கு உண்மையில் மிக ஆச்சரியம்!!! அவள் கண்களை அவளால்
நம்பமுடியவில்லை!!!.தன்னை தானே கிள்ளி கொண்டால்! இவனுக்கு என்னவாயிற்று
இன்று!! ‘எக்ஸாம்க்கு’ படிக்கும் போது,குண்டூசி கீழ விழுந்தாலே, அந்த கத்து
கத்துவான்.. மிகுந்த மன மகிழ்ச்சியில், அவளுக்கு பிடித்த ஒலி அளவில் வைத்து திரைபடம்
பார்க்க ஆரம்பித்தால்!
“இருக்கும் இடத்தை விட்டு ! இல்லாத இடம் தேடி ! எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!” !அவர்
ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே! என்ற பாட்டின் வரிகள் குமரன் செவிகளை மிருதுவாக வருடிச்சென்றது இப்போது!
கண்ணதாசனையும் அவன் “ஞான குருவாக” ஏற்று! அவன் தேடுதலை
ஆரம்பித்தான்...
தொடரும் ...


A sci-fi....In our mother tongue....
ReplyDeleteIt's beautiful.....
The Heart Does Speaks, at the ryt time ❤
This comment has been removed by the author.
DeleteBeautiful..!!
ReplyDeletegood..verse is too good....
ReplyDeleteSuper... interesting. ......
ReplyDeleteமிக அருமை ! படிக்க நன்றாக இருந்தது . சில இடங்களில் சிரித்தேன் .
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?fbid=1443307612625951&set=p.1443307612625951&type=1
ReplyDeleteExcellent
ReplyDeleteNice ... Good Try..
ReplyDelete